search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் கடத்தல்"

    • ரோந்து பணியில் சிக்கியது
    • போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த நேசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (வயது 30) மாட்டுவண்டியில் மணலை அள்ளிக்கொண்டு எஸ்.வி நகரம் அருகே வந்தபோது. ஆரணி தாலுகா போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன்அஜித் மாட்டுவண்டியை விட்டுவிட்டு தப்பிஓடினார்.

    இதேபோன்று மேலசீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமு மற்றும் பூபதி ஆகிய இருவரும் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தனர். அவர்களும் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் 3 வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாைரக் கண்டவுடன் தப்பி ஓடினர். தப்பி ஓடிய 3 பேரையும் ஆரணி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.

    • லாரியுடன் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அதனை ஓட்டி வந்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நிஷாந்த்திடம் கூறினர்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸ்காரர்களான சரவணன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டையில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் கார்காவயல் என்ற பகுதியில் செல்லும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு மினி லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அந்த மினி லாரியின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வழி மறித்தனர்.

    பின்னர் லாரியுடன் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அதனை ஓட்டி வந்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நிஷாந்த்திடம் கூறினர். ஆனால் இதனை கேட்காத நிஷாந்த் திடீரென லாரியை போலீசாரின் மோட்டார் சைக்கிளில் மோதி அவர்களை கொல்ல முயன்றார். பின்னர் அங்கிருந்து லாரியுடன் தப்பினார்.

    இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் இருந்து போலீசார் சரவணன், சதீஷ்குமார் இருவரும் தடுமாறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் பண்ணவயல் கிராமத்தை சேர்ந்த ராஜாவை (வயது31) கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    லாரியை ஓட்டி வந்த நிஷாந்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தனர்.
    • தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இன்று காலை திருமாணிக்குழி ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கே 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமாணிக்குழியை சேர்ந்த ராஜாங்கம், செல்வம், வெள்ளிகண்ணு, நம்பியார் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கண்காணிப்பு தீவிரம்
    • தாசில்தார் உத்தரவின் பேரில் நடவடிக்கை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக வரு வாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்ப டையில் தாசில்தார் வசந்தி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் தணிகாசலம், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ் வரி மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கடத்தலை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் புதுப்பாடி பாலாற்று பகுதியில் ராட்சத பள்ளங்கள் எடுத்து மணல் கடத்தலை தடுக்க நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் இதையும் மீறி யாராவது பாலாற்றில் மணல் கடத் துகிறார்களா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • அட்கோ போலீசார் ஆசனபள்ளி பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
    • அந்த வழியாக வந்த 4 டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பூனேபள்ளி பகுதியில் மத்திகிரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழிமறித்தனர். போலீசார் நிற்பதை கண்டு திடீரென்று லாரியை வழியில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அப்போது அந்த லாரியை சோதனை செய்ததல் அனுமதியின்றி 6 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் 6யூனிட் எம்.சாண்ட் மணல், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் ஓசூர் அட்கோ போலீசார் ஆசனபள்ளி பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்தனர். அதில புறம்போக்கு நிலத்தில் இருந்து மண் வெட்டி எடுத்து வந்து கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை அறிந்த 4 டிப்பர் லாரிகளின் டிரைவர்களும், அதற்கு உறுதுணையாக இருந்த பொக்லைன் டிரைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து மண்ணை வெட்டி கடத்திய 4 டிப்பர் லாரிகளையும், ஒரு ெபாக்லைன் வண்டியையும், 100 யூனிட் மண்ணையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார் வந்ததையடுத்து பள்ளிகொண்டா போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று பள்ளிகொண்டா அடுத்த வடகாத்திபட்டி சுடுகாடு அருகே ரோந்து சென்ற போது பாலாற்றில் இருந்து 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி விற்பனைக்கு எடுத்து சென்றுகொண்டு இருந்தது தெரியவந்தது.

    போலீசார் வருவதை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு 5 பேர் தப்பியோடினர்.

    இதில் ஒருவரை மட்டுமே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    • கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பியோடினார்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த எல்.வி.புரம் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வழியாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 கோணிப்பையுடன் ஒருவர் வந்தார். அவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பியோடினார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த கோணிப்பையை ஆய்வு செய்த போது ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் மோட்டார் சைக்கிளில் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்திய நபரை தேடி வருகின்றனர்.

    • ஒருவர் கைது
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பல்லூர் பகுதியில் உள்ள கொசஸ் தலை ஆற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்தப்படுவதாக அரக்கோணம் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

    அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் விரைந்து சென்ற வருவாய் அலுவலர்கள் மினி வேனில் மணல் கடத்திய நபரை கைது செய்தனர். பறிமுதல் செய்து மணலுடன் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

    இதேபோன்று கீழ் வெங்கடாபுரம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியும், பனப்பாக்கம் கிராமத்தில் 5 மாட்டு வண்டிகளும் கைப்பற்றப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

    மொத்தத்தில் மணல் கடத்திய ஒரு மினி வேன் உட்பட ஆறு மாட்டு வண்டிகளை அதிரடியாக வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அனுமதி இன்றி 3 மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக அனுமதி இன்றி 3 மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    எனவே, மணலுடன் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மயானமே அழியும் நிலையில் உள்ளதாக புகார்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பாலாற்றின் கரையில் சுடுகாடு உள்ளது. மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்தை ஒட்டி சமத்துவ மயானம் அமைத்து இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.

    இதே போன்று ஏற்கனவே சடலங்களை புதைத்த பழைய மயானத்தில் சமாதிகளில் ஒரே நேரத்தில் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்தப் பகுதியில் திருட்டு மணல் அள்ள தோண்டும் பள்ளத்தால் சமாதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மயானமே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    மணல் திருட்டையும் சமாதிகள் சேதப்படுத்துவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஒருவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டம்பள்ளி அடுத்த செட்டேரி டேம் அருகே உள்ள கானாற்றில் அடையாளம் தெரியாத 2 பேர் அரசுக்கு சொந்தமான இடத்தில் மணல் கடத்த அங்கிருந்த மணல்களை ஜல்லடை வைத்து ஜலித்துக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை கண்டதும் 2 பேரும் தப்பி ஓடினர். ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார்.

    கடலூர்: 

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி டிஎஸ்பி, ஆகியோர் உத்தரவின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,  சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவத்தூர் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் கடத்துவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து.உடனே போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார். உடனே போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தப்பி ஓடியது அதே ஊரை சேர்ந்த வெற்றிவேல் (எ) தேவவிரதன் என்பது தெரியவந்தது. அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×